ஜான் நேப்பியர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணித மேதை ஆவார். இவர் அச்நாட்டிலுள்ள எடின்பா்க் நகரின் அருகே அமைந்துள்ள “மொ்சிஸ்டன் காஸில்” என்னும் இடத்தில், 1550ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் இவரது காலம் கி.பி.1550-1617. தன்னுடைய பதிமூன்றாவது வயதிலேயே ஆண்ட்ருஸ் பல்கழைக்கழத்தில் சேர்ந்தார். எனினும் அங்கு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவா் பட்டம் எதுவும் பெறாமலே அக்கல்லூரியை விட்டு விலகினார். நேப்பியர் அதன் பிறகு பல வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றார். 1571ஆம் ஆண்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார். 1572ஆம் ஆண்டு நேப்பியரின் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது மனைவி ஏழு ஆண்டுகளில் மரணம் அடைந்தார். எனவே அவர் மறுமணம் புரிந்தார். நேப்பியர் கிறிஸ்தவ மதத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் ரோம் நகரிலுள்ள தேவாலயம் பற்றிய நூல் ஒன்றையும் எழுதினார்.  நேப்பியரின் பெரும்பாலான வாழ்க்கை கணித ஆராய்ச்சியிலேயே கழிந்தது. கூட்டல், கழித்தல், வர்க்க மூலத்தைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படும் கருவி ஒன்றை நேப்பியர் கண்டுபிடித்தார். அக்கருவி அவரது பெயரிலேயே “நேப்பியர் ராடு