பள்ளிகளில் கணிதம் கற்பதற்கு மிகவும் கடினமான பாடம் என்ற கருத்து மாணவர்களின் மனத்தில் பதிந்துள்ளது. அத்துடன் கணிதம் குறைவானவர்களே விரும்பும் பாடமாகவும் மாணவர்களிடம் இருக்கிறது. அதிகமான அளவில் மாணவர்கள் கணிதம் ஒரு வெறுப்பூட்டும் பாடம் என்றும், அது வாழ்க்கைக்கு எந்த வித்த்திலும் தொடர்பு இல்லாதது என்றும் கருதுகிறார்கள். இருப்பினும், சிறிது பொறுமை மற்றும் கணிதத்தைச் சுற்றி உள்ள அடிப்படை விதிகளை அறிதல் ஆகியவைகளை வைத்துக் குழந்தைகள் கணிதத்தை நட்பான அனுகுமுறை மூலம் கற்க முடியும்.
Lesson plan Details
Duration: 00 hours 40 mins
முன்னுரை:
வேடிக்கை விளையாட்டுப் போல் பொருத்தமான கருவிகளைப் பாடம் படிப்பதற்கு அவசியமான அங்கமாகவும், அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவும் கொண்டு கணிதத்தைக் கற்பிக்க முடியும். சரியான கருவிகள் மற்றும் பயிற்சிகளை அளிப்பதன் மூலம், கணிதத்தை மாணவர்கள் விரும்பிக் கற்கும் நிலை ஏற்படும். பயிற்சியின் பின்னணியில் இருக்கும் கணித விதிகளைக் கண்டறிவதற்குக் குழந்தைகள் சிறந்த கணிதத்தைக் கற்பிக்கும் விளையாட்டுக்களைக் குழுவாகச் சேர்ந்து பயில்வதன் மூலம் அவர்கள் கண்டறிவார்கள். கணிதப் பாடங்களை அறிமுகப்படுத்தும் போது, கணிதக் கருப்பொருட்களின் வடிவை மட்டும் அல்லாமல், அதே சமயத்தில் கருத்துக்களைப் பேசி - விவாதம் செய்வதையும் செயல் படுத்தவேண்டும். அப்பொழுதுதான், செய்முறைப் பயிற்சி நிலையிலிருந்து அதிகமான நுண்ணிய விதிகளை அறியும் நிலைக்கு சுலபமாக மாணவர்கள் மாறுவதை நிலை நாட்ட முடியும்.
Objective:
இலக்குகளும், நோக்கங்களும் -
கணிதத்தைப் பற்றி மாணவர்கள் தங்களுக்குள் பேச ஊக்குவிப்பதுடன், கணிதத்தைப் பற்றிய விவாதங்களை மாணவர்கள் மத்தியில் தூண்டுதல்.இருவராகவும், குழுவாகவும் அடிப்படைக் கணிதத் திறமைகளை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு உதவுதல்.கருப்பொருட்களைப் பற்றிச் சிந்திக்கவும், காரணத்தைக் கண்டுபிடிக்கவும் கருத்துப் பரிமாற்றம் - விவாதம் ஆகியவைகளில் மாணவர்களை ஈடுபடச் செய்தல்.மாணவர்கள் தாங்களாகவே கணிதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிய ஒரு தெளிவை அடைய உதவுதல். ஒரு உற்சாக மில்லாத தனிப்பட்டவரின் தேர்வாக இல்லாமல் குழுவாக உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் செய்யும் பயிற்சியாகக் கணிதத்தை உருவாக்கல்.
Steps:
பயிற்சி - 1
பார்த்துப் பயிலும் கணிதம்
பேசி அறிதல்
பயிற்சியின் கால அளவு - 20 நிமிடங்கள்.
படிகள்
படி 1 -
இருவராக வகுப்பு மாணவர்களைப் பிரிக்கவும்.ஒவ்வொரு இரட்டையர்களுக்கும் பயிற்சித் தாள் 1-யைக் கொடுக்கவும்.இரண்டுபேர் கொண்ட குழுவாக மாணவர்கள் பயிற்சியைச் செய்ய வேண்டும். முதலில் பயிற்சித்தாளில் காணப்படும் வடிவங்களை வர்ணம் பூசச் செய்யவும். எந்த வர்ணம் பயன்படுத்தவேண்டுமென்பதை அவர்களே முடிவு செய்து, விரும்பிய வர்ணக் கலவை விதியினையும் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு வர்ணம் பூசவேண்டும் என்று அவர்கள் விவாதித்து முடிவு செய்யலாம். உதாரணமாக அனைத்து வட்டங்களுக்கும் மஞ்சள், அனைத்துச் சதுரங்களுக்கும் சிவப்பு என்று வர்ணம் பூசலாம் அல்லது ஒவ்வொரு பெட்டியில் இருக்கும் வடிவங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை விரும்பித் தேர்வு செய்யலாம். இதன் மூலம், இந்த நிகழ்வு ஒரு பெரிய உற்சாகமான ஒன்றாக உருவாகிவிடும். அதன் மூலம், மாணவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் கலந்து பேசி, அதில் மிகுந்த ஈடுபாட்டினை உருவாக்கிவிட முடியும். விடைகளை கண்டுபிடிக்க மாணவர்கள் முயலட்டும். பிறகு, எவ்விதம் அவர்கள் அந்த விடைகளை தேர்வு செய்தார்கள் என்பதைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் உரையாடச் செய்யவும். அதைப் பற்றியும், அவர்களது அனுபவங்களையும் வகுப்பில் கலந்துரையாடுவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும். சரியான விடையைத் தேர்வு செய்வதற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல், மாணவர்கள் அவர்களின் விடையினைத் தேர்வு செய்ததை விளக்கும் படிச் செய்து, அவர்களது சிந்தனை ஓட்டத்தை விவரிக்கும் படி ஊக்குவிக்க வேண்டும். அவர்களது சிந்தனைப் போக்குகளைப் பற்றிப் பேசும்படிச் செய்வது, பிற்காலத்தில் மேல்வகுப்பு உயர் கணித்த்திற்கு ஒரு அடித்தளமாக அமையும்.
பயிற்சி - 2
பயிற்சியின் கால அளவு - 20 நிமிடங்கள்.
படிகள்
படி 1
ஒவ்வொரு குழுவிலும் 4 மாணவர்கள் இருக்கும் படி மாணவர்களைப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விளையாட்டுப் பலகையைக் கொடுக்கவும். பாம்பு - ஏணி, லூடோ, சீனா கட்டம், யுனோ - (Snakes and Ladders, Ludo, Chinese Checkers, Uno etc)- போன்ற விளையாட்டுக் கருவிகளைக் கொடுக்கவும். இந்த அனைத்துவகையான விளையாட்டிலும் கூட்டல் கணக்குகள் இடம்பெறும். ஆகையால், இந்த விளையாட்டுக்கள் அடிப்படைக் கணிதத் திறமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாகும். இந்த விளையாட்டுப் பயிற்சிகளில் செலவிடப்படும் நேரம் விணான விரையம் என்று கருதக் கூடாது. ஏனென்றால், எண்களைப் பற்றிய அறிதலைக் குழந்தைகள் அவர்களின் பலவித புலன்களின் மூலம் அடைகிறார்கள்.
புள்ளிகள் கொண்ட பகடைக் காயை உருட்டி விளையாடும் விளையாட்டை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். குழந்தைகள் பகடைக் காயை உருட்டி, பிறகு அதிலுள்ள புள்ளிகளைக் கூட்டி, அதன் எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும். மீண்டும், அந்தப் பகடைக் காயை உருட்டி, முன்பே கட்டம் போட்டு உருவாக்கப்பட்ட தாளில் அந்த எண்களைப் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பயிற்சித் தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் போல் இருக்கும். கூட்டல், கழித்தல் அல்லது பெருக்கல் ஆகியவைகளுக்கும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

படி 2 -
மாணவர்கள் வாழ்வில் கணிதத்தைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அனைவரும் பங்குகொள்ளும் பயிற்சியாக இது அமைகிறது.பொதுவாகக் கொடுக்கப்படும் வீட்டுக் கணக்கிற்குப் பதில், தங்களின் பெற்றோருடன் கடையில் சாமான் வாங்கும் போது கவனித்துச் செய்யும் முறையில் அமைந்த ஒரு பயிற்சியைச் செய்யக் கொடுக்கலாம். குழந்தைகள் கடையில் சாமான் வாங்கும் போது அவர்களது பெற்றோர்களுக்கு உதவி, அதே சமயத்தில் கணிதத்தையும் கற்கலாம். விற்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் பட்டியலை அவர்கள் தயாரிக்கலாம். அதில் கழிவு விலையைக் குறித்துக் கொண்டு, அந்தப் பொருளின் உண்மை விலையை கழிவு நீக்கி சரிபார்க்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு வாங்கும் பொருளிலும் கிடைக்கும் லாபத்தை நாம் அறிய முடியும். இந்த லாபத்தைக் கூட்டினால், நாம் அடைந்த மொத்த லாபம் தெரியும். இந்த மாதிரியான பயிற்சிகள் நேரிடையான கற்கும் அனுபவத்தைக் குழந்தைகளுக்குப் பெற வழிகோலும். இல்லாவிடில், கணிதத்தின் கருப்பொருட்கள் எல்லாம் வெறுப்படையச் செய்பவைகள் என்ற கருத்துத் தான் குழந்தைகளின் மனத்தில் நிலைத்து நிற்கும்.தெருவில் காணப்படும் எண்கள் மற்றும் அடையாளக் குறிகள், ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லும் கார்களில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கார்கள் அல்லது 2 அல்லது 3 அடுக்கு மாடி வீடுகள் அல்லது வேறு ஏதாவது அவர்களது மனதில் படுபவைகள் - ஆகியவைகளை மாணவர்கள் பார்க்கச் சொல்லவும். இதன் மூலம் கூட்டல், ஒருங்கிணைத்தல் மற்றும் பிரித்தல் ஆகியவைகளில் ஆர்வத்தை இந்தச் சுலபமான பயிற்சிகள் நிரந்தரமாக ஏற்படுத்தும்.
பின் இணைப்பு 1
பயிற்சித் தாள் 1
பார்த்துப் பயிலும் கணிதப் பயிற்சித் தாள்
பெயர் -------------------------- தேதி -------------------

இந்தக் கட்டுரை முதலில் டீச்சர் பிளஸ் - இதழ் நம்பர் 57 - நவம்பர்-டிசம்பர் 1998 வெளியிடப்பட்டது. அது சில மாற்றங்களுடன் தழுவி, இங்கு வெளியிடப்படுகிறது.
Comments
Post a Comment