கணக்கதிகாரம் புதிர்
புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில்
சென்று,
இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான
கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு
நூல்: கணக்கதிகாரம்
பாடியவர்: காரிநாயனார்
ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன.
அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின.
சாப்பிட்டு முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்றன.
இந்த ஐந்து பாதைகளும், ஏழு குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன.
அடுத்து, ஒன்பது சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன.
நிறைவாக, அவை பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.
Comments
Post a Comment