கணித விளையாட்டுகள்
ட்ரெயினிங்கிற்கு வந்த ஆசிரியரிடமிருந்து கற்றது. குழுவாக விளையாடுவது. 1,2,3 என்று ஒருவர் மாற்றி ஒருவர் வரிசையாக சொல்லிக் கொண்டே வர வேண்டும். ஆனால் 7, 14, 21 போன்று ஏழின் பெருக்குத்தொகை வரும் பொழுதும் 17,27,37 என்று ஏழில் முடியும் எண் வரும் பொழுதும் கைத் தட்ட வேண்டும். வாயால் சொல்லக் கூடாது. கேட்க எளிதாகத் தோன்றும். ஆனால் வேகமாக சொல்லும் பொழுது கடினமாக இருக்கும். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இந்த விளையாட்டை வித்தியாசப்படுத்தலாம்.

உதாரணத்திற்கு இரண்டின் அல்லது பத்தின் பெருக்குத் தொகை மற்றும் 3,13,23 என்று மூன்றில் முடிவன போன்றன.
2. இது கணித விளையாட்டு என்ற தலைப்பில் எழுதியது தான். இரண்டு நபருக்கு மேல் விளையாடுவதால், பத்திற்கு பதில் இருபது என்று வைத்துக் கொள்வோம். 20 திலிருந்து தலைகீழாக சொல்லிக் கொண்டே வர வேண்டும். ஒருவர் ஒரு எண்ணோ, இரு எண்ணோ சொல்லலாம். இறுதியில் யார் ஒன்றாம் எண் சொல்லுகிறாரோ அவருக்கு ஒரு பாயிண்ட்.
உதாரணத்திற்கு மூன்று பேர் விளையாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
முதல் நபர் : 20
இரண்டாம் நபர் : 19, 18
மூன்றாம் நபர் : 17
மீண்டும் முதல் நபர் : 16,15
இவ்வாறு சொல்லிக் கொண்டு வரும் பொழுது யார் ஒன்று என்று சொல்லுகிறார்களோ அவருக்கு ஒரு பாயிண்ட்.
3. ஒருவர் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் வயதிற்கு ஏற்ப 1 இலக்க, 2 இலக்க, 3 இலக்க எண் என மாற்றிக் கொள்ளலாம. மற்றவர்கள் கேள்விகள் கேட்டு அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். மனதில் நினைத்தவர் ஆம் இல்லை என்று மட்டும் சொல்லலாம். ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க வேண்டும். சரியாக கண்டுபிடிப்பவருக்கு 1 பாயிண்ட்.
உதாரணத்திற்கு 97 என்று மனதில் நினைத்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
கேள்வி 1 : 50 க்கு மேலா?
பதில் : ஆம்
கேள்வி 2 : 90 க்கு கீழா?
பதில் : இல்லை.
இவ்வாறு கேள்விகள் கேட்டு கண்டுப்பிடிக்க வேண்டும்.
4. குழந்தை தற்பொழுது கற்றுக் கொண்டு இருக்கும் கணித தலைப்பைக் கொண்டு விளையாட்டை உருவாக்கலாம்.
உதாரணத்திற்கு நாம் எந்த எண்ணைக் கூறுகிறோமோ, அதில் பத்தைக் கூட்டி சொல்ல வேண்டும். (Counting by 10)
கூறும் எபேர்ங மீண்டும் அந்த எண்ணுடன் கூட்டுச் சொல்ல வேண்டும்(Doubles)
பெரிய எண், சிறிய எண் கண்டுபிடித்தல்
எளிய கூட்டல், கழித்தல் மனக் கணக்குகள்
5. ஒருவர் நூறுக்குள் மூன்று எண்களை இரு முறை சொல்ல வேண்டும். மற்றவர் அந்த மூன்று எண்களையும் அதே வரிசையில் திரும்ப சொல்ல வேண்டும். வயதிற்கேற்ப எண்களையோ இலக்கங்களையோ அதிக அல்லது குறைக்கலாம்.

Comments
Post a Comment