பின்னம் என்றால் பொதுவாக 1-என்ற எண்ணின் மதிப்பிற்கும் கீழே உள்ள எண்கள் என்ற கருத்து மனதில் எழுவது சகஜம். ஆனால், தனிப்பட்ட பின்ன எண் 1-க்கும் கீழான மதிப்புக் கொண்டு தகு பின்னமாக இருப்பினும், அவை முழு எண்ணுடன் தொடர்பு கொண்டு தொகுதி எண், பகுதி எண்ணை விட மதிப்பு அதிகமாக இருக்கும் தகா பின்னமாக இருப்பினும் அவையும் பின்னமாகும்.
எந்த வகையான இரண்டு பின்னங்களையும் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் - ஆகியவைகள் கணிதத்தில் சிறிது கடினமான கட்டமாகும். அதிலும் வகுத்தல் இன்னும் கடினமாகும்.
வகுத்தலில் தொகுதி எண் வகுக்கும் பகுதி எண்ணைக் காட்டிலும் மதிப்புக் குறைவாக இருப்பின், அந்த கணக்கின் விடையை ஆராய்ந்து அதில் அடங்கும் விதிகளை அறிந்து கொள்வதில் சிறிது சிரமம் உண்டாவது சகஜம். மேலும், இந்த மாதிரி பின்ன வகுத்தலை வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் ஆசிரியர்களும் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுக்கு பெரிதும் உதவும் வண்ணம் இந்த வகையான கடினமான பின்ன வகுத்தலைக் கீழ்க்கண்ட மூன்று வழிகளில் விளக்கப்பட்டுள்ளன:
- வர்ண வட்டம் வரைந்து விளக்குதல்.
- அளவு குழாயில் நீரை நிரப்பிப் பயிற்சி செய்தல்.
- எண் கோட்டின் மூலம் விளக்குதல்
பெருக்கல் பின்னத்திலும் இவ்வகையான மூன்று வழிகளிலும் ஒரே கணக்கு செய்யப்பட்டிருக்கிறது.
காகிதத்தை மடித்து எவ்வாறு பின்ன கணிதங்களை கற்பிக்கலாம் என்பது ஆசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நம்பிகிறோம்.
இந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்து கணிதங்களும் விரிவான படங்களுடன் உரை விளக்கமும் கொடுக்கப்பட்டிருப்பதால், மாணவர்களும் ஆசிரியர்களின் உதவி இன்றியே படித்துத் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த நூல உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு.
Comments
Post a Comment