கற்கண்டு கணிதம் கணிதப்புதிர்கள்
கடிகாரம் 5 முறை மணியடிக்க 12 வினாடி. எனவே 1 க்கும் 5 க்கும் இடையில் 4 இடைவெளி உள்ளது. 4x3=12. ஒரு இடைவெளிக்கு 3 வினாடி. 1 க்கும் 10 க்கும் இடையில் 9 இடைவெளி உள்ளது. எனவே 10 முறை மணியடிக்க 9x3=27 வினாடி.
2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?
30 அடிக்கு 10 தூண்கள் மேலும் முதலில் நடப்பட்டுள்ள தூணையும் சேர்த்து 11 தூண்கள்.
3) ஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது. எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள்பாதி குளத்தை நிரப்பி இருக்கும் ?
தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது என்பதால் 29 நாட்களில் பாதி குளம் நிரம்பினால் 30 வது நாளில் இரட்டிப்பாகி முழு குளமும் பூக்களால் நிரம்பியிருக்கும்.
4) பாதி நீரிலும், 1/12 பங்கு சேற்றிலும், 1/6 பங்கு மணலிலும் புதைந்திருக்கும் ஒரு கம்பம் 1 ½ முழம் வெளியே தெரிந்தால் அதன் நீளம் என்ன ?
கம்பத்தின் நீளம் x எனில், கணக்கின்படி x – (1/2 x + 1/12 x + 1/6 x ) = 1 ½ x – 9/12 x = 3/2 è 3x/12 = 3/2 è x = 6
5) இரண்டிலிருந்து ஆறு வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மீதி ஒன்று வரும். ஆனால் ஏழால் வகுத்தால் மீதி ஒன்று வராது. அந்த எண் என்ன ?
இதற்கு இரு விடைகள் உண்டு. 1) 301 2) 721
6) வானில் பறந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்த்து, மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பறவைக்குஞ்சு கேட்டது, “நீங்கள் ஒரு நூறு பறவைகள் இருப்பீர்களா...? என்று கேட்டது. அதற்கு அந்த பறவைக் கூட்டதின் தலைமைப் பறவை சொன்னது, நாங்களும் எங்கள் இனத்தாரில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு” என்றது எனில் எத்தனை பறவைகள் வானில் பறந்து இருக்கும் ?
வானில் பறந்த பறவைகளை x என்க. கணக்கின்படி, x + x/2 + 1 = 100 è 3x/2 = 99 è x = 66.
Comments
Post a Comment