Skip to main content

கற்கண்டு கணிதம் கணிதப்புதிர்கள் -3


கற்கண்டு கணிதம் கணிதப்புதிர்கள் விடைகளுடன்

1) கட்டியால் எட்டு கட்டி


காலரை முக்கால் கட்டி


செட்டியார் இறந்து போனார்


சிறுபிள்ளை மூன்று பேர்


கட்டியை உடைக்காமல்


கணக்காய் பிரித்திடுக...



2) ஒருநாள் தன் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டுக் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி நாள் ஒன்றுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து செல்கிறாள். ஏழு நாட்களுக்குப் பிறகு கணவன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து சென்றான். அவ்விருவரும் எப்போது சந்திப்பார்கள் ? இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?


3) ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ.1, 50 காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையைக் கொடுக்கக் கூடியன. பையில் எத்தனை எத்தனை காசுகள் இருந்தன ?
பையிலிருந்த மொத்த பணம் எவ்வளவு ?


4) ஒரு காய்கறி கடைக்காரர் 40 கிலோ எடை கொண்ட காய்களை வைத்திருக்கிறார். அவர் வைத்துள்ள எடைக்கற்கள் நான்கு. அவரிடம் யார் வந்து எவ்வளவு எடை ( 40 கிலோ மற்றும் அதற்குள் )கேட்டாலும் எடைப்போட்டுத் தருகிறார். எடை அளவு பின்னங்களில் இல்லையெனில் கற்களின் எடை யாது ?


5) ஒருவர் முட்டைகளை தட்டுகளில் அடுக்கி, சைக்கிளில் வைத்து எடுத்து செல்லும் பொது எதிரே வேகமாக வந்த ஆட்டோ அவர் சைக்கிளை லேசாக மோதி தள்ளிவிட்டுச் சென்றது. இதனால் சைக்கிள் பின்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சரிந்து விழுந்ததில் பல முட்டைகள் உடைந்து விட்டன. உடையாமல் எஞ்சிய முட்டைகளை எடுத்து எண்ணிப்பார்த்து உடைந்த முட்டைகள் எவ்வளவு என்று கணக்கிட்டுப்பார்த்தான். உடைந்த முட்டைகளின் எண்ணிக்கையை 2,3,4,5,6 ஆல் வகுக்க 1மீதியும், 7 ஆல் வகுக்க மீதமின்றியும் இருக்கக்கூடிய ஒரு சிறிய எண்ணாக இருந்தது. உடையாமல் எஞ்சிய முட்டைகளின் எண்ணிக்கையை 2 ஆல் வகுக்க 1 மீதியும், 3 ஆல் வகுக்க 2 மீதியும், 4 ஆல் வகுக்க 3 மீதியும், 5 ஆல் வகுக்க 4 மீதியும், 6 ஆல் வகுக்க 5 மீதியும் கிடைத்தன. ஆனால் இதுவும் 7 ஆல் மீதமின்றி வகுப்பட்டது எனில் உடைந்த முட்டைகள் எவ்வளவு? உடையாத முட்டைகள் எவ்வளவு?


6) 3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்த கூடுதல் 31 என்று வர வேண்டும். (+,-,x, ÷ எதை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் )

7) 1 லிருந்து 10 வரை அனைத்து எண்களையும் பயன்படுத்தி மொத்த கூடுதல் 100 என வர வேண்டும் எனில் அத்தொடரைக் காண்க.

8) 6 என்ற எண்ணின் எல்லா வகு (1,2,3,6) எண்களின் கூடுதல் ( 6 ஐத் தவிர்த்து ) (1 + 2 + 3 = ) 6 என்ற அதே எண். இவ்வாறு அமைந்த அடுத்த எண்ணைக் காண்க.

Click here for answers







Comments

Popular posts from this blog

6th Maths LO Based Lesson plan Topic : வடிவியல்

 Karkandu kanitham Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website