யாருக்கு லாபம் விடை கூறுங்கள் பார்க்கலாம் - கணிதப்புதிர்
அவ்வூரின் மிகப்பெரிய செல்வந்தர்கள் ஒருவர் தான் மட்டுமே அறிவாளி எனவும், அதன் காரணமாகவே தான் செல்வந்தனாக இருப்பதாகவும் பிறரை இழிவு படுத்தி வந்தான். பணபலம் படைத்தவன் ஆகையால் அவனை யாரும் எதிர்த்து பேசாது இருந்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாக அவ்வூருக்கு வந்த ஒருவர் அந்த செல்வந்தனை சந்தித்து ’தான் ஒரு வியாபாரி என்றும் அவருடன் ஒரு வியாபாரம் செய்ய வந்துள்ளதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டான்’.
வியாபாரத்தை பற்றி பேசுகையில் அது பொருள்கள் வாங்குவதோ, விற்பதோ இல்லையென்றும் தான் தினமும் ஒரு இலட்ச ரூபாய் அந்த செல்வந்தருக்கு தருவதாகவும் அதற்க்கு பதிலாக அவர் ஒரு ரூபாய் தந்தால் போதும் என்று கூறினான்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த செல்வந்தர் “ ஒரே ஒரு ரூபாயா ? “ என்று கேட்டார்.
”ஆமாம், முதல் நாள் ஒரே ஒரு ரூபாய் தான் “ என்று வியாபாரி பதில் அளித்தார்.
”அப்படியென்றால் இரண்டாம் நாள் ?” என்று செல்வந்தர் கேட்டார்.
”இரண்டாம் நாள் இரண்டு ரூபாயும்; மூன்றாம் நாள் நான்கு ரூபாயும்; நான்காம் நாள் எட்டு ரூபாயும் தரவேண்டும்” என்றார் .
”பொறும்! பொறும் ஒவ்வொரு நாளும் அதற்கு முந்திய நாளைப்போல் இருமடங்கு தர வேண்டும் அவ்வளவு தானே ! அப்படி எத்தனை நாட்கள் தர வேண்டும் ?” என்று கேட்டார் செல்வந்தர்.
”அவ்வளவேதான் ! அது போன்று முப்பது நாட்கள் தர வேண்டும். அந்த முப்பது நாட்களும் தினமும் ஒரு இலட்ச ரூபாயை உங்களிடம் தந்து விட்டு நீங்கள் தரும் அந்த பணத்தை பெற்றுச்செல்வேன்.” என்றார் அந்த வணிகர்.
மனதுகுள்ளே ஓரளவு கணக்கு போட்டு பார்த்த செல்வந்தர் இவன் என்ன பைத்தியமா ? ஒரு சில ஆயிரம் ரூபாய்களுக்காக முப்பது இலட்ச ரூபாய் தருகிறேன் என்கிறானே ! என்று எண்ணியபடி “ உண்மையாகவே முப்பது நாட்களும் தருவாயா ? ஒரு சில நாட்களோடு நின்று விடமாட்டாயே ? “ என்று கேட்டார் செல்வந்தர்.
”இல்லையில்லை ! முப்பது நாட்களும் கண்டிப்பாக நான் வருவேன். வேண்டுமானால் நாம் ஒப்பந்தம் எழுதிக்கொள்ளலாம்.” என்றார் அந்த வணிகர்.
எப்படியானாலும் சரி, நடுவில் வராவிட்டாலும் லாபம் நமக்குத்தானே என்று எண்ணியவராக ஒப்பந்தம் போட தாயாரானார் செல்வந்தர்.
ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் அந்த வணிகர் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சம் வீதமாக முப்பது நாட்களுக்கு செல்வந்தருக்கு தருவதாகவும்; அதற்கு பதிலாக வணிகர் முதல் நாள் ஒரு ரூபாயும், இரண்டாம் நாள் இரண்டு ரூபாயும், மூன்றாம் நாள் நான்கு ரூபாயும்,நான்காம் நாள் எட்டு ரூபாயும், ஐந்தாம் நாள் பதினாறு ரூபாயும் அதே போன்று ஒவ்வொரு நாளும் அதற்கு முந்திய நாள் போல் இரண்டு மடங்கு முப்பது நாட்களுக்கு தரவேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல் நாள் தவனையாக செல்வந்தரிடம் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு ஒரு ரூபாயை பெற்றுக்கொண்டு வணிகர் சென்று விட்டார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு இலட்சம் கிடைத்த சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக்கொண்டு காலையில் அவன் வருவானா ? என்ற எண்ணத்திலேயே தூங்கிப்போனார்.
இரவு நீண்ட தூங்காகததால் காலை தாமதமாக எழுந்த அவருக்காக வணிகர் இன்னொரு இலட்ச ரூபாயுடன் காத்துகொண்டு இருந்தார்.இரண் டாம் நாள் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு இரண்டு ரூபாயை பெற்றுக்கொண்டு சென்றார்.
மூன்றாம் நாள் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு நான்கு ரூபாயையும், நான்காம் நாள் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு எட்டு ரூபாயையும்,ஐந்தாம் நாள் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு பதினான்கு ரூபாயையும் பெற்றுக்கொண்டு அப்படியே நாள் தவறாமல் பத்தாம் நாள் ஒரு இலட்ச ரூபாயை கொடுத்து விட்டு 512 ரூபாயை பெற்றுக்கொண்டு சென்றார்.
செல்வந்தருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இது வரை அவர் கொடுத்திருக்கும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1023 மாத்திரமே ஆனால் அவர் பெற்றிப்பதோ பத்து இலட்சம். ஏன் இந்த வணிகன் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறான். ஒரு வேளை கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தைல் அதையும் பரிசோதித்து பார்த்தாயிற்று எவ்வித புகாரும் இல்லை. காரணத்தை கண்டுபிடிக்க இயலாதவராக பணத்தை பெற்றுக்கொண்டு அவர் பங்கை கொடுத்துக்கொண்டும் இருப்பது தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது…
படித்தாயிற்றா ? இதே போன்ற சலுகையுடன் உங்களிடம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?
பதிலை கீழேயுள்ள Your Comments form-ல் டைப் செய்யுங்கள்.
Comments
Post a Comment